fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனாவினால் ஸ்தம்பிதம் அடைந்தது உலகம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:12

உலகம் முழுவதும் பல நாடுகள் தங்களது பொதுச் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலே இதற்கு காரணமாகும். பொதுமக்கள் ஒன்று கூடல், கழியாட்ட நிகழ்வுகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன. கிரேக்கத்தில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கட்டார் அதிகாரிகள் அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளனர். அரசியல் மற்றும் விளையாட் நிகழ்வுகளை தடை செய்வதற்கு அல்ஜீரியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் நியுயோர்க் நகர பிரதானியின் ஆலோசனையின் பேரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு விசேட படையணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் சகல கலைநிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தாலியிலிருந்து வருகை தரும் சகல விமான சேவைகளையும் இரத்து செய்வதற்கு பல நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஸபெய்ன், ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளன. கஷகஸ்தான் நாடு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதேவேளை சீனாவில் கொரோனா பரவ ஆரம்பித்த பகுதியான வூஹான் நகருக்கு மக்கள் செல்வதற்கும் அங்கிருச்து வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரசுக்கு எதிராக திட்டங்களை முன்னெடுக்க ஜப்பான், 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிகொண்ட நிதியத்தை அமைத்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய சங்க நாடுகளின் தலைவர்கள் காணொளி ஊடாக இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க