fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

INNOTECH 2020 கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 09:47

இனோடெக் 2020 கண்காட்சி இன்று ஹோமாகம , பிட்டிபன்னயில் ஆரம்பமாகிறது. நாட்டின் எதிர்கால சந்ததியினரை இலக்கு வைத்து எதிர்வரும் 14 ம் திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடம், நொனோ தொழிநுட்பத்திற்கான இலங்கை நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்திற்கான தேசிய பாடசாலை மற்றும் நில அளவையியல் திணைக்களம் ஆகிய 5 வளாகங்களில் கண்காட்சி இடம்பெறும். கண்காட்சியை இலவசமாக பார்வையிட முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ம் திகதி ஸ்ரீ ஜயர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கான தொழிநுட்பவியல் பீடத்தை திறந்தவைக்கவுள்ளார். அதற்கிணைவாகவே குறித்த கண்காட்சியினை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 130 பாடசாலைகள், 15 பல்கலைக்கழகங்கள், 16 தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் தமது புத்தாக்கங்களை இங்கு காட்சிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 09:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க