fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2020 17:29

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த சிம்பாப்பே போட்டியில் கலந்து கொண்ட லஹிரு திரிமான நீக்கப்பட்டு குசல் ஜனித் பெரேரா மற்றும் வணிந்து ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஓஷத பெர்ணான்டோ, குசல் மென்டிஸ், எஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஸ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, விஸ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, லக்ஸான் சந்தகென், சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 19ம் திகதி காலியில் இடம்பெறும். 2வது போட்டி 27ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2020 17:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo