fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் 2வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2020 17:25

உலகின் 2வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டொக் ஹோம் சர்வதேச ஆராய்ச்சி மையம் நடத்திய கணிப்பீட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடு சவுதி அரேபியா ஆகும். உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் பட்டியலில் 25 நாடுகள் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் 23வது இடத்தில் இந்தியா உள்ளது.

2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மொத்த ஆயுத உற்பத்தியில் 9.2 சதவீதத்தை இந்தியா கொள்வனவு செய்துள்ளது. உலகில் மோதல்கள் இடம்பெறும் நாடுகளின் ஆயுத கொள்வனவு துரிதமாக அதிகரித்துள்ளது. இந்த கேள்வியுடன் ஆயுத உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால பகுதியில் உலகில் அதி உயர் ஆயுத இறக்குமதியாளராக இந்தியா காணப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 10, 2020 17:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க