பல்கலைகழக தொகுதிக்குள் இடம்பெறுகின்ற மனிதாபிமானமற்ற பகிடி வதை சம்பவங்கள் காரணமாக பல இளம் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சகல சந்தர்ப்பங்களிலும் பகிடி வதையை தடை செய்வதற்கு கடும் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அவற்றில் எவ்வித குறைவும் காணப்படாமை கவலைக்குறிய விடயமாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலகைழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் மாணவர் ஒருவர் கவலைக்கிடமான நிலைமைக்கு தள்ளப்பட்ட துரதிஷ்ட வசமான சம்பவமொன்று நேற்று ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் முதல் வருட மாணவர்களுக்கு பகிடி வதை வழங்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற உபசார நிகழ்வொன்றில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. மினுவங்கொட தொவோல கொட பகுதியை வசிப்பிடமாக கொண்ட பசிந்து ஹிருஷான் என்ற மாணவனே இத் துரதிஷ்ட வசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பசிந்து ஹிருஷான் படிக்கட்டிலிருந்து இரங்கும் சந்தர்ப்பத்தில் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் அவர் மீது பாரிய டோசர் வாகணமொன்றை தள்ளி விட்டுள்ளனர்.
அவ் வாகணம் மீது இம் மாணவனின் உடல் மோமியதை அடுத்து அவர் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன் மாணவனின் தலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இம் மாணவன் தற்போது கொழும்பு தேசிய வைத்திய சாலையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் 7 மணிநேர சத்திர சிகிச்சைக்கும் இம் மாணவன் உட்படுத்தப்படதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 2018ம் ஆண்டில் உயர்தர பரிட்சைக்கு தோற்றிய பசிந்து சிறந்த பெறுபேருகளை பெற்று பல்கலைகழக வரத்தை பெற்று கொண்டார். இப் பரிட்சைக்கு தோற்றுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் புற்று நோய் காரணமாக பசிந்துவின் தாயார் உயிரிழந்தார். இரண்டு சகோதரர்களை கொண்ட இக் குடும்பத்தின் சிறியவனான பசிந்து ஹிருஷானின் எதிர்பார்ப்பாக பல்கலைகழக கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து தனதுகுடும்பத்திற்காக பொறுப்பை நிறைவேற்றுவதாகும்.
சமூகத்தில் மிகவும் உயர்ந்த இடமாக கருதப்படுகின்ற பல்கலைகழக தொகுதிக்குள் மனிதாபிமானமற்ற ஒரு சிலரின் இவ்வாரான செயற்பாடுகள் காரணமாக பல எதிர்பார்ப்புக்களுடன் பல்கலைகழகத்தினுள் நுழைகின்ற மாணவர்களுக்கு தமது கனவு சின்னாபின்னமாக்கப்படுகின்ற ஒரு இடமாக பல்கலைகழகங்கள் காணப்படுகின்றமை முழு சமூகத்தினதும் துரதிஷ்டமாகும். இச் சம்பவம் குறித்து விசேட குழுவொன்றை நியமித்து விசாரனைகளை முன்னெமுடுப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.