fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா துறையின் வருமானத்தை அதிகரிக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 14:34

சுற்றுலா துறையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலக்காக கொண்டு 5 ஆண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

2025 ம் ஆண்டளவில் 10 பில்லியன் வருமானத்தை தேசிய பொருளாதாரத்தில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய இவ்வருட மத்தியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் கல்ப் வலய நாடுகளுக்னெ சுற்றுலா மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, ஜப்பான், கொரியா, போலந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடனான தொடர்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33