ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த வேன் ஒன்று, வீதியிலிருந்து விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் லுனுகம்வெஹர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.