அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் மக்களின் நாளாந்த வாழ்க்கை முறை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கென பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் முன்னெடுத்துள்ளன. அதன் ஒரு கட்டமாக வொசிங்டனில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.