அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றவதற்கென வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்தற்கொண்டு சின்னங்களை மாற்றுவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய சின்னங்களை மாற்றுவதற்கான தேவையுள்ளவர்கள் இன்று வரை
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கென வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை கடந்த 3ம் திகதி ஆரம்பமானது. இதுவரை 24 சுயாதீன குழுக்கள் வேட்னுமனு தாக்கல் செய்துள்ளன. எதிர்வரும் 19ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே தபால்மூலம் வாக்களிக்கவுள்ளவர்கள் அதற்கென எதிர்வரும் 16ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.