கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும். தேசிய பரீட்சைக்கென விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக பொறுப்பேற்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அதிகளவான தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாணவர்களின் தகவல்கள் கணணி மயப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வழங்கப்படும் இலக்கத்தின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதன் காரணமாக நேர்முகப் பரீட்சைகளின் போது பரீட்சை சான்றிதழ்களை எடுத்து செல்லவேண்டிய தேவை ஏற்படாதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி முதல் 28 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பழைய மற்றும் புதிய பாட்டத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் இடம்பெறும். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 2 ம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.