சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் “2020 லியவருன”
Related Articles
சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த 2020 லியவருன செயற்றிட்டம் கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் இன்றைய நாள் முழுவதும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் லிய அபிமன் விருதுகள் ஆறு பேருக்கு வழங்கப்பட்டன. கம்பஹா வனஜீவராசிகள் அதிகாரி தேவானி ஜயதிலக்க, கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் பதில் செயலாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ, பிரபல கட்டட கலைஞர் ஏ.எச்.டியூட்டின், விசேட தேவையுடையோர் தொடர்பில் குரல் எழுப்பிய சமூக செயற்பாட்டாளர் நீஷா ஷரீப், கோப்ரல் ஜயவீரகே நிஷாந்தி மற்றும் சமூக செயற்பாட்டாளர் சமந்திக்கா ஜீவனி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹன, நிறைவேற்று பணிப்பாளர் ஹசந்த ஹெட்டியாராச்சி, பொது முகாமையாளர் அருண விஜயசிங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.