fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் 6 மாநிலங்களில் கொரேனா வைரஸ் பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:39

இந்தியாவின் 6 மாநிலங்களில் கொரேனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேஷ், பஞ்சாப் மற்றும் சிக்கிம் ஆகிய 6 மாவட்டங்களுக்கே கொரோன வைரஸ் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்கள் விழிப்புடன் செயற்படவேண்டுமென இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த மாநிலங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க