fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற 9 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:15

போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கினிகத்தேன தியகல பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

அதன்போது யாத்திரிகர்களும் அவர்கள் வருகை தந்த வாகனமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போதே போதை பொருளுடன் குறித்த 9 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கேரள கஞ்சா போதை பொருளை எடுத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo