fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய கல்வி கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:05

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய கல்வி கண்காட்சியும் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஹோமாகம பிட்டிபன புத்தாக்க நகரில் இடம்பெறவுள்ளது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை வென்ற புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. ஹோமாக பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானம், நெனோ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் மற்றும் என்.எஸ்.பீ.எம். பசுமை பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த 300 ஏக்கர் நிலப்பரப்பு ஆகியவற்றில் குறித்த கண்காட்சி இடம்பெறும்.

இக்கண்காட்சிக்கு சகல விஞ்ஞான ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப பீடங்கள் மற்றும் சமுத்திர பல்கலைக்கழக மற்றும் பாடசாலைகளின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இங்கு பாடசாலை மாணவர்களின் பல்வேறு புத்தாக்கங்களும் காட்சிப்படுத்தப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.ச்சித்ரானந்த தெரிவித்தார். எதிர்வரும் புதன்கிழமை முதல், சனிக்கிழமை வரை இடம்பெறும் இக்கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணம் இல்லையென உயர்கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க