பெண்களுக்கு உள்ள உரிமையை மேலும் உறுதிசெய்வது கட்டாயமாகும்
Related Articles
மனித குலத்தின் உருவாக்கத்திற்கு காரணமாகவும், நாடுகளின் சமூக அமைப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழும் பெண்களின் பங்களிப்பை கெரளவத்துடன் நினைவுகூர்வதாக ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாவர். இலங்கை பெண்களின் சமூக அபிவிருத்தி சுட்டெண் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தரத்தை அடைந்துள்ளது. இதன்மூலம் இலங்கை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் புலப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சமூக பங்களிப்பு மற்றும் ஆயுள் எதிர்ப்பார்ப்பு போன்ற பல விடயங்களில் முன்நிற்பதின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெண்களே அதிக பங்களிப்பை வழங்குகின்றனர். பெண்கள் வெற்றிகளை அடைவதற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும், அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் சமமாக வழங்கப்படுவதற்குமான சூழல் தமது அரசாங்கத்தில் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிக்கவும், நாட்டில் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கவும் இலங்கை பெண்களுக்கு உள்ள உரிமையை மேலும் உறுதிசெய்வது கட்டாயமாகும். இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரதும் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற தாம் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.