எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தின் செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரியின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான ஆவணத்தை வழங்கியுள்ளார். தேர்தல் செலவு அதில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியல் யாப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே திறைசேரியின் செயலாளருக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்தால் வழங்கப்படவேண்டிய நிலுவைக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சுகளுக்கு அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.