அரசாங்கம் இதுவரை 15 ஆயிரத்து 970 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. நெற் கொள்வனவு செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக சபையின் தலைவர் ஜட்டால் மானபெரும தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்தும் கூடுதலான அளவு நெல் கொள்வனளவு செய்யப்பட்டது. வெள்ளை பச்சை, சிவப்பு பச்சை மற்றும் கிரி சம்பா போன்ற நெல் வகைகள் அதிகளவில் கிடைத்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் சபையின் தலைவர் ஜட்டால் மானபெரும தெரிவித்தார்.
இதேவேளை இராணுவத்தினரும் ஒரு கோடியே 38 இலட்சம் கிலோ நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரம தெரிவித்துள்ளார்.