கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சீனாவில் பீஜிங், ஷென்ஹய் மற்றும் குவேன்ஷோ நகரங்களுக்கான விமான சேவை இம்மாதம் 10 திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நிறுத்தப்படுமென இலங்கை விமான சேவை அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் ஜித்தா நகருக்கான விமான சேவை இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நிறுத்தப்படும்.
எனினும் ரியாத் மற்றும் தமாம் நகர்களுக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் நடத்தப்படும். இதேவேளை தற்போதைய நிலை சீராகினால் இடைநிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென இலங்கை விமான சேவை அறிவித்துள்ளது.