சவூதி அரேபிய அரச குடும்பத்தை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் மூவர் கைதுசெய்யபட்டுள்ளனர். அதில் சவூதி அரேபிய மன்னரின் சகதோரரும் அடங்குவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏனைய இருவரும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மானின் ஆதரவுடனே அரச குடும்ப உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக நீயோக் டைம் மற்றும் வேல்ட் ஸ்ரிட் ஜெனரல் ஆகிய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமத் பின் நயீப் மற்றும் நவாப் பின் நயீப் ஆகிய மூவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.