fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதல் : ஈரான் இராணுவ தளபதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 15:23

கொரோனா வைரஸ் தொற்று சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதலாக இருக்கலாமென ஈரான் இராணுவ தளபதி ஹசைன் ஹலாமி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவே உயிரியல் தாக்குதலை நடத்தியிருக்க கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கு பின்னர் ஈரானே கொரோனா வைரசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு உப ஜனாதிபதி மற்றும் சுகாதாரத்துறை பிரதியமைச்சருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து ஈரான் மீள எழுமென அந்நாட்டு இராணுவ தளபதி ஹுசைன் சலாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை மூவாயிரத்து 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 15:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo