fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகாலநிலை பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:39

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வொஷிங்டன் பிராந்தியத்திற்கு வெளியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கலிபோர்னியாவில் முதலாவது உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. அதனையடுத்து அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தியாவசிய தேவையன்றி, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் பொது இடங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கலிபோர்னிய பிராந்திய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வயதானவர்களை வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நெருங்கிய தொடர்புகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரு நபர்களுக்கிடையில் குறைந்தது ஒரு மீட்டரளவில் தூரத்தை கடைபிடிக்குமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க