fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:39

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் அரங்கில் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கையணி லசித் மாலிங்க தலைமையிலும், மேற்கிந்திய தீவுகள் அணி கிரோன் பொல்லாட் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் இலங்கையணி வெற்றிபெற்றால் மாத்திரமே இரு போட்டிகளைக் கொண்ட தொடரை சமப்படுத்த முடியும்.

இதேவேளை போட்டியில் வெற்றிபெற புதிய வியூகங்களுடன் இலங்கையணி களமிறங்குமென அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை பங்களாதேஷ் மற்றும் சிப்பாபே அணிகளுக்கிடையான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க