fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 14 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:02

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கட்டம் ஒன்று இடிந்து வீழ்ந்தமையினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து மாடி கட்டடம் ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது. 30கும் கூடுதலானோர் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அருகாமையில் இருந்த ஒருசில கட்டடங்களுக்கும் இதன்மூலம் சேதம் ஏற்பட்டுள்ளது. இடிப்பாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை தேடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிர்மாணத்துறையில் காணப்படுகின்ற பலவீனங்கள் காரணமாக பாகிஸ்தானில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க