fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவகங்களில் வழங்கப்படும் கழிவுத்தேயிலை தேநீர் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 13:09

கொழும்பு நகரிலுள்ள உணவகங்களில் வழங்கப்படும் தேநீர் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் அதுதொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கொழும்பு மாநகர சபையின் மத்திய உணவுக்கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. சில உணவகங்களில் கழிவுத்தேயிலையைப் பயன்படுத்தி தேநீர் தயாரிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் உணவுப் பரிசோதகர் எம்.வி. லால்குமார தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தேநீர் தயாரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படின் 0112 676 161 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறியத்தரமுடியுமென பதில் உணவுப் பரிசோதகர் எம்.வி. லால்குமார குறிப்பிட்டுள்ளார். பாவனையாளர்களுக்கு சுகாதாரமான உணவு மற்றும் பானங்களை பெற்றுக்கொடுப்பதே பிரதான நோக்கமென அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க