fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரண்டு கோடியே 44 இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 12:49

இரண்டு கோடியே 44 இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தீர்வை வரியற்ற வணிக வளாகத்தில் பணிபுரிபவர்களென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களின் ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 3 கிலோ 103 கிராம் எடைகொண்ட தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க கட்டிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் தங்ஓவிட்ட மற்றும் ராகம பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடையவர்களாகும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப்பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க