fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்துவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:46

இரண்டு வகையான கொரோனா வைரஸ்கள் உலகை அச்சுறுத்தி வருவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளினால் இது தொடர்பான அறிக்கையொன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. மூர்க்கமான எல் வகை புதிய வைரசே 70 வீதமான நோய் தாக்கத்திற்கு காரணமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய எஸ் வகை வைரஸ் 30 வீதமான நோய் தாக்கத்திற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலாவது வகை வைரஸ் வுஹானில் ஆரம்ப நாட்களில் காணப்பட்டதாகவும், எனினும் ஜனவரி மாத்திற்கு பின்னர் அதன் தாக்கம் குறைவடைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எல் வகை வைரஸ்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் அறிகுறிகளை கண்டுபிடிப்பது சுலபமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வகையான வைரஸ்களே தற்போது அதிகம் பரவுவதாகவும் சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொரொனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்கடொலர்களை நிதியுதவியாக வழங்க சர்சதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. வறுமை மற்றும் மத்திய தர நாடுகளுக்கு குறித்த நிதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தம் ஏற்படக்கூடுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியாவா தெரிவித்துள்ளார். எனினும் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் கணிப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க