fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 11:01

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டுவண்டி – 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நேற்று பல்லேகலையில் போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. லெண்டி சிமென்ஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், எண்ட்ரு ரசல் 35 ஓட்டங்களையும், அணி தலைவர் கிரான் பொலாட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்கு 197 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. எனினும் 19.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றுக்கொண்டது. அதிகூடியதாக குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஓஷானே தோமஸ் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார். அவரே போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். இரண்டு போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 11:01

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க