பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது
Related Articles
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட – துட்டுகெமுனு மாவத்தையில் இது தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரிடமிருந்து 2.3 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான நபருக்கெதிராக நீதிமன்றங்களினூடாக 9 பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மஹபாகே, பேலியகொட, கிரிபத்கொட, கட்டான ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளை உடைத்து, சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் கொள்ளையிட்ட தங்கம், கையடக்கத்தொலைபேசி, கணனி, தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. அவரை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.