fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலுக்கென பயன்படுத்தப்பட்ட படகு தொடர்பில் விசாரணை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 10:51

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலுக்கென பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகுகள் இன்றைய தினம் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு எடுத்துச்செல்லப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலினூடாக சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சமுதுர மற்றும் சிதுரல கப்பல்கள் சுற்றிவளைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. இதன்போது போதைப்பொருள் எடுத்துவரப்பட்ட இலங்கை படகொன்றும், குறித்த படகுக்கு போதைப்பொருளை வழங்கியதாக சந்தேகிக்கபபடும் மேலும் இரு படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டன. இதன்போது கைதுசெய்யப்பட்ட ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 10:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க