அமெரிக்கா தலிபான்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்
Related Articles
அமெரிக்கா, தலிபான்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள தலிபான் அமைப்பினரின் இலக்குகள் மீது, அமெரிக்கா வான் வழித் தாக்குதலை மேற்கொணடுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான் அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடி வழங்கும் வகையிலேயே தமது இராணுவத் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.