1500 போதை பொருள் டொபி பக்கற்றுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தேகொட வீடமைப்பு கட்டிட தொகுதியிலுள்ள ஆயூர்வேத உற்பத்தி விற்பனை நிலையம் ஒன்றிலேயே இவை கைப்பற்றப்பட்டன. பாதுக்க கலால் மத்திய நிலையத்தின் பிரதான பரிசோதகர் சுமதி சந்திரகுமாரவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலை மாணவர்கள் இப்போதை பொருள் டொபிகளை கொள்வனவு செய்வதாக பிரதேச மக்களிடமிருந்து தகவல்கள் கிடைத்ததாகவும் கலால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.