கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது
Related Articles
கஞ்சா போதை பொருளுடன் இருவரும் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரும் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கஞ்சா போதை பொருடன் இருவரும் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இருவருமாக ஐவரை இன்று அதிகாலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் திடீர் தேடுதல் நடாத்திய பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.