fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:17

ரஷ்யா, சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இவ்வருட ஆரம்ப காலப்பகுதி வரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து குறித்த குழு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விமானங்கள் பொது மக்களின் நிலைகளை நேரடியாக தாக்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களினால் யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆணைக்குழுவொன்றினால் ரஷ்யா மீது இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இது முதல் தடவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க