அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவுகிறது. மெல்பேர்னின் வெப்பநிலையானது 20.1 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அவுஸ்திரேலியாவில் தற்போது பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெப்பமான வானிலையே நிலவும். எனினும் இவ்வருடம் குளிரான வானிலை நிலவுகின்றமை அசாத்தியமான வானிலை மாற்றத்தை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு வளிமண்டல ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.