பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிளைபோசெட் இராசாயன களஞ்சியசாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்து. இராஜகிரிய கொதடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவு நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இணைந்திருந்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான கிளைபோசெட் தொகை இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிளைபோசெட் தொகை மற்றும் அழகு சாதனப் பொருட்கள், மாத்திரைகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.