fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பளம்…

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2020 14:11

தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியிருந்த வாக்குறுதிக்கமைய இந்த சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த பொங்கல் தினத்தன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார். தோட்ட கம்னிகளுடன் இடம்பெற்ற தொடர்ச்சியான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை. எதிர்வரும் நாட்களில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பளம் அதிகரித்தபோதிலும், எதிர்வரும் ஏப்ரல் மாதமே மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்வார்களென குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2020 14:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க