கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வு

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வு

🕔18:27, 30.மார்ச் 2020

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் 4 மாத  கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் இதேவேளை, கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,

Read Full Article
ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..

🕔17:00, 30.மார்ச் 2020

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கெகண்டுள்ளது. தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு

Read Full Article
உள்நாட்டுப் போரை நிறுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டுமென போப்பாண்டவர் வலியுறுத்து

உள்நாட்டுப் போரை நிறுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டுமென போப்பாண்டவர் வலியுறுத்து

🕔12:46, 30.மார்ச் 2020

பிரான்சில் உள்நாட்டுப் போரை நிறுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடவேண்டுமென போப்பாண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு யுத்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளன. குறித்த இக்கட்டான சூழ்நிலையில் வைரசை ஒழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உலகளாவிய ரீதியில்

Read Full Article
வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

🕔12:45, 30.மார்ச் 2020

அமெரிக்காவில் சமூக இடைவெளி உத்தரவு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 484 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் எதிர்வரும் இருவாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை உச்ச கட்டத்தை எட்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை

Read Full Article
கொரோனா வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்குமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்குமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை

🕔12:39, 30.மார்ச் 2020

அமெரிக்காவின் சிக்காகோ பகுதியில் வைரஸ் தொற்றினால் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அனைத்து வயதினைரையும் தாக்கக்கூடியதாக கொரோனா வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் அதிகளவானா முதியவர்களே உயிரிழந்துள்ளனர். எனினும் ஒரு வயதைக் கூட பூர்த்திசெய்த சிசுவொன்று உயிரிழந்துள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை

பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக 6 மாத சிறைத்தண்டனை

🕔12:32, 30.மார்ச் 2020

வர்த்தக நிலையங்களின் நாளாந்த விநியோக நடவடிக்கை தொடர்பில் கண்காணிக்கப்படுவதாப பாவனையாளர் அலுவலக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்

Read Full Article
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

🕔12:28, 30.மார்ச் 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி , களுத்துறை, புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு 6 மணித்தியாலம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றவேண்டியது அவசியமாகும். ஒருவருக்கு ஒருவர் ஒரு மீற்றர்

Read Full Article
மின்சார தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழப்பு

மின்சார தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழப்பு

🕔12:23, 30.மார்ச் 2020

மின்சாரத்தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புஹூல்பொல பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புஹுல்பொல விவசாய கால்வாயில் நீர் இயந்திரத்தை பொருத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மின்சாரத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ராகல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெலிமடை பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை

Read Full Article
இன்று முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனம்

இன்று முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனம்

🕔12:20, 30.மார்ச் 2020

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்கென அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை சக்திப்படுத்தும் வகையில் இன்றுமுதல் ஏப்ரல் 3 ம் திகதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச , அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இதன் கீழ் செயற்படவேண்டுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read Full Article
கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது

🕔11:55, 30.மார்ச் 2020

கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை 6 மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் ,

Read Full Article