கொவிட் 19 வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவல்

கொவிட் 19 வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவல் 0

🕔15:01, 27.பிப் 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் பூராகவும் 40 நாடுகளில் பரவியுள்ளது. இதேவேளை தென்கொரியாவில் நாளாந்தம் இவ்வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை சீனாவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சீனாவில் மாத்திரம் 433 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இக்காலத்திற்குள் தென்கொரியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 334 ஆகும் இதற்கமைய தென்கொரியாவில்

Read Full Article
நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் 0

🕔14:57, 27.பிப் 2020

நாட்டை கட்டியெழுப்பும் குழுவுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கஹடகஸ்திஹிலிய பிராந்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். (வேரொருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் போது தமது கட்சி சார்நதவர்களுக்கு முன்னுரிமை

Read Full Article
கட்சி தலைமைதுவத்தை மாற்றி அமைப்பதே பெரும்பாலானோரின் நோக்கம்

கட்சி தலைமைதுவத்தை மாற்றி அமைப்பதே பெரும்பாலானோரின் நோக்கம் 0

🕔13:40, 27.பிப் 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகும்மென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்ஷேகா தெரிவித்துள்ளார். ராகம வல்பொல விமல ரதனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவுடனே

Read Full Article
முன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில்

முன்னாள் அமைச்சர் றிஷாட்டின் மனைவி CIDயில் 0

🕔13:38, 27.பிப் 2020

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் மனைவி குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டார். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையாத்திற்குரிய ஆவணங்கள் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் வரவலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இதற்கு முன்னரும் குற்ற புலனாய்வு தினைக்களம் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றக்கொண்டுளன்ளது. தற்போது

Read Full Article
கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச நிகழ்வுகள் ரத்து

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச நிகழ்வுகள் ரத்து 0

🕔12:49, 27.பிப் 2020

சர்வதேச ரீதியிலான வேலைத்திட்டங்கள் பலவற்றை தற்காலிகமாக இடைநிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறவிருந்த கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தாலி அயர்லாந்துக்கு இடையில் இடம்பெறவிருந்த ரக்பி போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை யுமோ போட்டியையும் பிற்போடுவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read Full Article
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு தொடர்பான அறிக்கை துறைசார் அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு தொடர்பான அறிக்கை துறைசார் அமைச்சரிடம் சமர்ப்பிப்பு 0

🕔12:34, 27.பிப் 2020

நுரைச்சோலை முதலாம் இலக்க மின்உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற செயலிழப்பானது நீண்டகாலத்திற்கு பிறகு இடம்பெற்ற சம்பவம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அதுதொடர்பான அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ம் திகதி ஏற்பட்ட திடீர் செயலிழப்பு தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர்

Read Full Article
உயர்செயற்திறனை வெளிக்காட்டிய அரச நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை

உயர்செயற்திறனை வெளிக்காட்டிய அரச நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை 0

🕔12:19, 27.பிப் 2020

உயர் செயற்திறனை வெளிக்காட்டிய 110 அரச நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நாளை தினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நிகழ்வு இடம்பெறும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கருஜெயசூரிய ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு 844 நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன.

Read Full Article
ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் 0

🕔12:18, 27.பிப் 2020

வறுமையிலுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கு வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. குறைந்த வருமானம் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவையும் இதில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read Full Article
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்..

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்.. 0

🕔12:09, 27.பிப் 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் இன்றைய தினம் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. அதன் இன்றைய அமர்வில் அவர் வாய்மூலான அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

Read Full Article
டெல்லி வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லி வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔11:56, 27.பிப் 2020

இந்தியாவின் டெல்லி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தரப்பினர் மற்றும் அதற்கு ஆதரவான தரப்பினருக்கு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின்போதே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்த 200க்கும்

Read Full Article

Default