fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரயில் சேவை..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 17:04

கொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வாரத்திற்கு 5 நாட்கள் ரயில் சேவை நடத்தப்படவுள்ளது. மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து சேவை இடம்பெறும். தற்போது மாத்தளையிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே நடத்தப்படுகிறது. வாரத்தில் ஐந்து நாட்கள் சேவையை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத சேவைகள் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மாத்தளையிலிருந்து தினமும் காலை 06.30 க்கு ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கும். கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 02.30 க்கு மாத்தளைக்கான ரயில்சேவை நடத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 17:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க