மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ருவென்றி – 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மாலிங்க தலைமையில் இலங்கையணி களமிறங்கவுள்ளது. அவிஷ்க பெர்ணாண்டோ , குசல் ஜனித் பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். திசர பெரேரா, தசுன் ச்சானக, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகேன், இசுரு உதான, நுவான் ப்ரதீப் மற்றும் லஹிறு குமார ஆகியோரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரு ருவென்றி – 20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி மார்ச் மாதம் 4ம் திகதியும், இரண்டாவது போட்டி 6ம் திகதியும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.