fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:06

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை வெகு விமர்சையாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் 6ம், மற்றும் 7ம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது.

இம்முறை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்களென எதிர்பார்ப்பதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்;ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத விதத்தில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவ கண்காணிப்பு செயற்பாடுகளை சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo