fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:00

ஐக்கிய தேசிய கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் செயற்குழு கூடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்போது கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படுமெனவும் அவர் குறிப்பட்டார்.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூடவுள்ளது. கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் நடைபெறும். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பலர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பர். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சின்னமாக யானை அல்லது அன்னம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். செயற்குழு கூட்டத்தின்போது சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo