டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்துவம் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக பொல்வேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.