fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:06

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜபர் மிர்ஸா தெரிவித்துள்ளார். ஈரானிலிருந்து வருகை தந்த இளைஞரொருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரானிலிருந்து வருகைதரும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரிலிருந்து பாகிஸ்தான் மாணவர்கள், அழைத்துவரப்பட மாட்டார்களென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுமார் 800 பாகிஸ்தான் மாணவர்கள், வுஹான் நகரில் தங்கியுள்ளனர். அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டால் அவர்கள் மூலமாக ஏனையோருக்கு வைரஸ் தொற்று பரவக்கூடுமென பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் குறித்த கருத்துக்கு பாகிஸ்தான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 16:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo