fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஆயிரத்து 200 பேருக்கு நிரந்தர நியமனம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 15:55

5 வருடங்கள் சேவைக்காலத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படாத புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஆயிரத்து 200 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்காலப்பகுதியில் சாதாரண, தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையின் கீழ் புகையிரத திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. தமது சேவையை நிரந்தரமாக்குமாறு ஊழியர்கள் கடந்த 5 வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் தான் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு தற்போதைய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 15:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க