fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 – பங்கு சந்தைகள் துரிதமாக வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 12:23

கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பங்கு சந்தைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்காவின் டச் ஜோன்ஸ் பங்கு சந்தை வரலாற்றில் முதற்தடவையாகவே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் இவ்வைரஸ் தொற்றிய மேலும் இரு நாடுகளாக நியூசிலாந்து மற்றும் நைஜீரியா காணப்படுகின்றன.

புதிய கொரோனா வைரஸ் தொற்றானது இக்கட்டனான நிலைமையில் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொறுப்பாளர் டெட்ரோஸ் எடனம் தெரிவித்துள்ளார். இவ்வைரஸ் தொற்று காரணமாக 2858 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் 13 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவை தொடர்ந்து தென்கொரியாவிலேயே இத்தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு 2022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் தென்கொரியாவில் 256 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். தேகு நகரில் இருந்தே கூடுதலானோர் அறிவிக்கப்படுகின்றனர். கொவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து தேரி மீண்டும் அத்தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் தொடர்பான தகவல்கள் ஜப்பானில் இருந்து அறிவிக்கப்படுகின்றது. அந்நாட்டில் கொவிட் 19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 900 ஆகும். ஜப்பானில் பாடசாலைகள் மார்ச் 2ம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

ஈரானில் 26 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 270 பேர் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். ஈரான் துணை ஜனாதிபதிக்கும் கொரோனா தாக்கியுள்ளது. அந்நாட்டின் பிரதி சுகாதார அமைச்சரும் இத்தொற்றுக்கு இலக்காகியதாக அண்மையில் செய்தி வெளியாகின. இத்தாலியில் 14 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், 650 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க