தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை
Related Articles
சசெக்ஸின் பிரபுவான ஹெரி மற்றும் மேர்கன் ஆகியோருக்கு கெனடா பாதுகாப்பு வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இத்தம்பதியினர் மார்ச் 31ம் திகதி முதல் அரச குடும்பத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக நீங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இளவரசர் மற்றும் இளவரியாக கடமையாற்றமாட்டார்கள்.
எனினும் 12 மாதங்களுக்கு பின்னர் இது தொடர்பாக மீளாய்வு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தன்னை இனி, அரச குடும்ப அடைமொழியோடு அதாவது இளவரசர் ஹெரி என யாரும் அழைக்க வேண்டாம் என ஹெரி கேட்டுக்கொண்டார்.