அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலி
Related Articles
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஊழியர் ஒருவரே இத் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளார். இதில் அக் கைதொழிற்சாலையில் இருந்த ஐந்து ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்தனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சகல பாடசாலைகளையும் இந் நிறுவனங்களையும் மூடிவிட நடவலடிக்கை எடுக்கப்பட்டது.
இவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடடாத்தியமைக்கான காரணம் இது வரை தெரிய வரவில்லை துப்பாக்கிச் சூடு நடாத்தியதை தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2020 ம் ஆண்டில் இவ் இரு மாதங்களுக்குள் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கி பிரயோக சம்பவம் இதுவாகும். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களினால். உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.