ஹெட்டிப்பொல – ஹல்மில்லவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறித்த பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளது. வீட்டில் தூக்கிலிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.