தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார்.
மஞ்சுவாரியர் கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். அதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டி இருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தோஷ்சிவன் கூறியுள்ளார்.